/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குமணன்சாவடி சாலையில் மின்விளக்கு அமையுமா?
/
குமணன்சாவடி சாலையில் மின்விளக்கு அமையுமா?
ADDED : ஏப் 23, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமணன்சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் 2 கி.மீ., துாரம் சாலை, பூந்தமல்லியில் உள்ளது. இந்த சாலை வழியே, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இதன் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மின்விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வழியே நடந்து செல்லும் பெண்கள், மாணவியர் அச்சமடைகின்றனர். இந்த சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள், பூந்தமல்லி.

