/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து திருட முயன்ற போதை நபருக்கு 'கம்பி'
/
வீடு புகுந்து திருட முயன்ற போதை நபருக்கு 'கம்பி'
ADDED : ஜூலை 16, 2024 12:21 AM
அயனாவரம், அயனாவரம் பி.இ., கோவில் வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 36. இவர், 76வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சசிகுமார் என்பவரிடம் டிரைவராக பணிபுரிகிறார்.
ஆனந்த் கடந்த 13ம் தேதி வீட்டை பூட்டி, பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம், ஆனந்த் வீட்டிற்கு போதையில் சைக்கிளில் வந்த மர்ம நபர், வீட்டு வாசலில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்து உள்ளே சென்றுள்ளார்.
இதை, பார்த்த அக்கம் பக்கத்தினர் அயனாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார், வீட்டுக்குள் திருடி கொண்டிருந்த மர்ம நபரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். விசாரணையில், வேலுார் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஜோதிமணி, 53, என்பதும், பூ வியாபாரம் செய்வதும் தெரிய வந்தது.
மேலும், இவர் மீது அயனாவரம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.

