/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகைக்கடையில் செயின் திருடிய பெண் கைது
/
நகைக்கடையில் செயின் திருடிய பெண் கைது
ADDED : பிப் 27, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவந்தாங்கல்: நங்கநல்லுார் 4வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜேஷ், 31. இவர், அதே பகுதியில், தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி கடைக்கு வந்த பெண், ராஜேஷின் கவனத்தை திசை திருப்பி, 12 கிராம் தங்கச் செயினை திருடி சென்றார்.
பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர். இதில், செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரைச் சேர்ந்த பிரியங்கா, 36, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், செயினை மீட்டனர்.

