/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லோடு வேனில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
/
லோடு வேனில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ADDED : ஆக 23, 2024 12:26 AM
ஸ்ரீபெரும்புதுார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கமலி பெஹாரா, 40. இவர், காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதுார் அருகே மண்ணுாரில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு உணவு அளிக்கும் கேன்டீனில் பணி புரிந்தார்.
வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில் சென்று உணவு வினியோகம் செய்தார்.
பின், அதே வாகனத்தின் பின்னால் அமர்ந்து வீடு திரும்பினார். தண்டலம் -- பேரம்பாக்கம் சாலையில், மண்ணுார் அருகே வந்தபோது, கமலி பெஹாரா எதிர்பாராதவிதமாக, வாகனத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
இதில், படுகாயடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

