/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
7 மாதத்தில் 5 முறை மக்கர் வாஷிங் மிஷினை ஷோரூம் முன் எரிக்க முயன்ற பெண் ணால் சலசலப்பு

UPDATED : மே 16, 2024 06:33 AM
ADDED : மே 16, 2024 12:56 AM
திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் லாவண்யா, 28. இவர், தேவி திரையரங்கம் அருகில் உள்ள ஷோரூமில்,15,000 ரூபாய் கொடுத்து வாஷிங் மிஷின் வாங்கியுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன், ஐந்து முறை வாஷிங் மிஷின் 'மக்கர்' ஆகியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் பழுதான காரணத்தால், மன உளைச்சலடைந்த லாவண்யா, தன்னுடன் இரு பெண்களை அழைத்துக்கொண்டு, நேற்று முன்தினம் மாலை ஷோரூமிற்கு வாஷிங் மிஷினுடன் சென்றுள்ளார்.
இனிமேல், என்னால் அவதிப்பட முடியாது, எனக்கு புது வாஷிங் மிஷின் வேண்டும் என்று கேட்டுள்ளார். 'கடை ஊழியர்கள் புதிது தர முடியாது. வேண்டும் என்றால் பழைய வாஷிங் மிஷினை பழுது பார்த்து தருகிறோம்' என தெரிவித்துள்ளனர்.
ஆத்திரமடைந்த லாவண்யா, அந்த வாஷின் மிஷினை நடுரோட்டில் வைத்து எரிக்க முயன்றார். தகவல் கிடைத்து திருவல்லிக்கேணி போலீசார் அங்கு வந்து லாவண்யாவை சமாதானப்படுத்தினர். பின், வாஷிங் மிஷினை நடுரோட்டில் போட்டுவிட்டு, ேஷாரூம் ஊழியர்களிடம் 'நீங்களே வைத்து கொள்ளுங்கள்' எனக்கூறி அங்கிருந்து சென்றார்.