/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஒர்க் ஷாப்' கடைகள் தொடர் அராஜகம் தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
/
'ஒர்க் ஷாப்' கடைகள் தொடர் அராஜகம் தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
'ஒர்க் ஷாப்' கடைகள் தொடர் அராஜகம் தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
'ஒர்க் ஷாப்' கடைகள் தொடர் அராஜகம் தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் நெரிசல்
ADDED : ஜூன் 11, 2024 12:32 AM

தாம்பரம், தாம்பரத்தில், காந்தி சாலை சிக்னல் முதல் சானடோரியம் மெப்ஸ் சிக்னல் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் கிழக்கு பகுதியில், 'ஒர்க் ஷாப்' மற்றும் வாகன உதிரி பாகன விற்பனை கடைகள், 'டாஸ்மாக்' கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த 'ஒர்க் ஷாப்' கடைகளுக்கு, பழுதை சரி செய்வதற்காகவும், உதிரி பாகங்களை மாற்றுவதற்காகவும் தினமும் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன.
அப்படி வரும் வாகனங்களை கடைக்காரர்கள், ஜி.எஸ்.டி., சாலையிலேயே நிறுத்தி வேலை செய்கின்றனர். அந்த வகையில், சாலையின் பெரும் பகுதியை அவர்கள் ஆக்கிரமித்து, தங்கள்சொந்த இடமாகவே மாற்றிவிட்டனர்.
மற்றொருபுறம், நடைபாதையையும் ஆக்கிரமித்துள்ளனர். 'டாஸ்மாக்' கடைகளுக்கு வரும் வாகனங்களும், சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.
இதனால் பாதசாரிகள்,நடைபாதையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால்,ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையில் வாகனங்கள் வரிசைகட்டி நிறுத்தப்படுவதால், 'பீக் ஹவர்' நேரத்தில், தாம்பரம்முதல் மெப்ஸ் சிக்னல்வரை நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.
'தேவையானது' கிடைத்து விடுவதால், போக்குவரத்து போலீசாரும், சட்டம் -- ஒழுங்கு போலீசாரும், இப்பிரச்னையை கண்டுகொள்வதே இல்லை.
போலீசாரின் வாகனங்களுக்கு, 'ஒர்க் ஷாப்' கடைக்காரர்கள் இலவசமாக பழுது பார்ப்பதால், சாலை ஆக்கிரமிப்பை அவர்கள் கண்டுகொள்ளாததும், மற்றொரு காரணமாக உள்ளது.
இப்பிரச்னையில், போக்குவரத்து காவல் உயரதிகாரிகள் தலையிட்டு, தாம்பரம் முதல் மெப்ஸ் சிக்னல் வரை அதிகரித்துள்ள சாலை ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

