/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒய்.எம்.சி.ஏ., பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., சாம்பியன்
/
ஒய்.எம்.சி.ஏ., பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., சாம்பியன்
ஒய்.எம்.சி.ஏ., பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., சாம்பியன்
ஒய்.எம்.சி.ஏ., பால் பேட்மின்டன் எஸ்.ஆர்.எம்., - எம்.ஓ.பி., சாம்பியன்
ADDED : ஜூலை 25, 2024 12:50 AM

சென்னை, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவுகூரும் வகையில், 'பக்' கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
இதில், வாலிபால், தடகளம், பேட்மின்டன், பால் பேட்மின்டன், குத்துச்சண்டை உட்பட 18 விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000த்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
இதில், பால் பேட்மின்டன் போட்டியில் ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., அணி, 35 - 31, 35 - 26 என்ற கணக்கில் சென்னை ஆர்.கே.எம்., அணியையும், அரையிறுதியில் எஸ்.ஆர்.எம்., அணி, 35 - 11, 35 - 18 என்ற கணக்கில் கிரசன்ட் அணியையும் தோற்கடித்தன.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 35 - 25, 35 - 18 என்ற கணக்கில், லயோலா கல்லுாரி அணியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது.
அதேபோல், பெண்களுக்கான இறுதிப் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் - எஸ்.ஆர்.எம்., அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், முதல் சுற்றில் 32 - 35 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., அணியின் கை ஓங்கியது. ஆனால், அடுத்த இரண்டு சுற்றுகளையும் 35 - 32, 35 - 30 என்ற கணக்கில் எம்.ஓ.பி., வைஷ்ணவ் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி பொருளாளர் ஜான், கல்லுாரி முதல்வர் ஜான்சன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். மற்ற போட்டிகள் நடக்கின்றன.