ADDED : ஆக 30, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
துரைப்பாக்கம்,
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சிவா, 34. திருமணமாகவில்லை. ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு ஆண்கள் விடுதியில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் இரவு, விடுதி மின் இணைப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. காரணம் அறிய, மின் பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டு, சிவா பலியானார். துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

