/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்விரோத தகராறில் இளைஞர் மண்டை உடைப்பு
/
முன்விரோத தகராறில் இளைஞர் மண்டை உடைப்பு
ADDED : ஏப் 28, 2024 01:12 AM

புழல்,:செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன், திருவள்ளூர் நகர், உதயசூரியன் தெருவைச் சேர்ந்தவர் பூவரசன், 23.
இவருக்கு கொடுக்கல், வாங்கல் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு, புழல் அடுத்த காவாங்கரை, திருநீலகண்டன் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு பூவரசன் சென்றுள்ளார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அவரது எதிரிகளான ஜோஸ்வா, 25, சசி, 25, ஜீவா, 20, சூர்யா, 24, ஆகிய நான்கு பேரும், பூவரசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த பூவரசன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து விசாரித்த புழல் போலீசார், நான்கு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

