/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரின் மண்டை உடைப்பு வழிப்பறி ஆசாமிக்கு 'காப்பு'
/
வாலிபரின் மண்டை உடைப்பு வழிப்பறி ஆசாமிக்கு 'காப்பு'
வாலிபரின் மண்டை உடைப்பு வழிப்பறி ஆசாமிக்கு 'காப்பு'
வாலிபரின் மண்டை உடைப்பு வழிப்பறி ஆசாமிக்கு 'காப்பு'
ADDED : ஆக 26, 2024 01:51 AM
அயனாவரம்:அயனாவரம், அம்பேத்கர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 28; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, அயனாவரம், பி.ஏ., கோவில் தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர், மது அருந்த பணம் கேட்டார். 'பணம் இல்லை' என ஆகாஷ் கூறவே, கையில் இருந்த ஹெல்மெட்டால் ஆகாஷின் தலையில் மர்ம நபர் ஓங்கி அடித்தார். பின் கொலை மிரட்டல் விடுத்து, 800 ரூபாய் பறித்து சென்றார்.
காயமடைந்த ஆகாஷை, அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து விசாரித்த அயனாவரம் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட அயனாவரத்தைச் சேர்ந்த சுனில், 28, என்பரை நேற்று கைது செய்தனர்.