/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1 கிலோ தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்
/
1 கிலோ தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : அக் 13, 2024 02:27 AM
சென்னை:மலேஷியாவில் இருந்து கடத்தி வந்த 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு ஒரு விமானம் சென்னைக்கு வந்தது.
அதில் வந்த பயணியரை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், சுற்றுலா 'விசா'வில் மலேஷியாவுக்கு சென்று திரும்பியது தெரிந்தது. அவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதித்தனர்.
பின், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது, உள்ளாடைக்குள் 1 கிலோ தங்கம் இருந்துள்ளது. அதன் மதிப்பு 72 லட்சம் ரூபாய். அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த அந்த பயணியை கைது செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.