/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல்
/
சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல்
ADDED : ஆக 23, 2025 11:15 PM
சென்னை, கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டியை, சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து, தனியார் பயணியர் விமானம் ஒன்று, நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணியரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையல், இருந்த நபர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையை சேர்ந்த, 35 வயது ஆண் பயணி ஒருவருடையை உடைமைகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த சூட்கேசில், கருப்பு நிற பேப்பரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது, அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதன் எடை ஒரு கிலோ; மதிப்பு 95 லட்சம் ரூபாய்.
தேகாவில் இருந்து, சென்னைக்கு தங்க கட்டிகளை சட்ட விரோதமாக கடத்த முயன்ற அந்த பயணியை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

