/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஷவர்மா சாப்பிட்ட மேலும் 10 பேர் 'அட்மிட்' * பாலபவன் ஹோட்டலிலும் ஆய்வு
/
ஷவர்மா சாப்பிட்ட மேலும் 10 பேர் 'அட்மிட்' * பாலபவன் ஹோட்டலிலும் ஆய்வு
ஷவர்மா சாப்பிட்ட மேலும் 10 பேர் 'அட்மிட்' * பாலபவன் ஹோட்டலிலும் ஆய்வு
ஷவர்மா சாப்பிட்ட மேலும் 10 பேர் 'அட்மிட்' * பாலபவன் ஹோட்டலிலும் ஆய்வு
ADDED : ஏப் 03, 2025 11:53 PM

சென்னை, தரமற்ற உணவு சாப்பிட்ட மேலும் 10 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 43 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள, 'பிலால்' ஹோட்டல், திருவல்லிக்கேணி 'பிலால் பிரியாணி' ேஹாட்டலில், ஷவர்மா, மயோனைஸ் சாப்பிட்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டு,33 பேர், அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
புகாரையடுத்து, பிலால் பிரியாணி ஹோட்டலை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூடி, 'சீல்' வைத்தனர். பிலால் ஓட்டல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே, இந்த ேஹாட்டல்களில் சாப்பிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மேலும் ஒன்பது பேர் நேற்று, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மற்றொரு சம்பவம்
சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், அருணாச்சலம் தெருவில் உள்ள பாலபவன் உணவகத்தில், 30ம் தேதி இரவு ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன், அப்பகுதியில் உள்ள 'சிம்சன்' 24 மணிநேர கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார்.
தனக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது குறித்து, வழக்கறிஞருடன் சென்று சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், சிறுவன் புகார் அளித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள், பாலபவன் உணவகத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சுகாதாரமற்ற நிலையில் உணவகம் இருந்ததால், 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், ஷவர்மாவிற்கு பயன்படுத்தப்படும் சிக்கன், குடிநீர், மசாலா பொருட்கள் உட்பட ஆறு உணவு பொருட்களின் மாதிரிகளை, பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
கெட்டுப்போன உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 43 ஆக உயர்ந்துள்ளது.

