/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 மாணவர்கள் உட்பட 10 பேர் கஞ்சா பதுக்கியதால் கைது
/
2 மாணவர்கள் உட்பட 10 பேர் கஞ்சா பதுக்கியதால் கைது
ADDED : ஜூலை 14, 2025 01:55 AM
மதுரவாயல்:போதை பொருட்கள் வைத்திருந்த இரு கல்லுாரி மாணவர்கள் உட்பட 10 பேரை, போலீசார் கைது செய்தனர்.
மதுரவாயல், காமாட்சி அம்மன் நகர் 2வது பிரதான சாலையில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் தப்ப முயற்சித்த 10 பேரை பிடித்தனர்.
பிடிபட்டோர், மதுரவாயல் தனியார் கல்லுாரியில் பி.டெக்., படிக்கும், ஒசூரைச் சேர்ந்த வசந்த், 23, மதுரவாயலைச் சேர்ந்த கல்லுாரி மாணவன் பவேஷ், 21, காரனோடை கார்த்திக், 27, மதுரவாயல் ஐ.டி., ஊழியர் ஆகாஷ், 24, முகப்பேர் கிழக்கு கவுதம், 28, என்பது தெரிந்தது.
இவர்களையும் சிதம்பரத்தைச் சேர்ந்த நடிப்பு பயிற்சியாளர் ராஜ்குமார், 27, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 'ஸ்கூபா டைவிங்' பயிற்சியாளர் ரூபன், 26, செங்குன்றம் தினேஷ்குமார், 24, திவாகர், 27, மதுரவாயலைச் சேர்ந்த அருண்பரிசித், 27, ஆகியோரையும், போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, போதை ஸ்டாம்ப், கஞ்சா மற்றும் 62,000 ரூபாய், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.