ADDED : ஜூன் 12, 2026 03:15 AM
அ நிறம் | அளவு
புளியந்தோப்பு: ராஜஸ்தானைச் சேர்ந்த மோகன், 40, புளியந்தோப்பு வீரா செட்டி தெருவில் மனைவி சுகிதேவி, நண்பரின் மகன் மோகன், 24, உள்ளிட்டோருடன் வசிக்கிறார். சவுகார்பேட்டையில் சொந்தமாக துணிக்கடை வைத்துள்ளார்.
இவர்களது வீட்டு கதவின் சாவி, காலணியில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காணவில்லை.
வெளியூர் சென்ற மோகன், அவரிடம் இருந்த மற்றொரு சாவியில் நேற்று வீட்டை திறந்தார். பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் திருடுபோனது தெரிந்தது. பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
