ADDED : ஜூன் 12, 2026 03:16 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சாலையை தோண்டும்போது மின்கேபிள்கள் சேதமடைந்து, அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதை தடுக்க சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வாரியம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட 11 சேவைத் துறைகளுடன் இணைந்து, மின்வாரியம் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளது. இதனால், சேதம் மற்றும் மின்தடைகளை தவிர்க்கலாம்.
