/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலிக்க மறுத்த சிறுமியை வெட்டிய வாலிபருக்கு '10 ஆண்டு'
/
காதலிக்க மறுத்த சிறுமியை வெட்டிய வாலிபருக்கு '10 ஆண்டு'
காதலிக்க மறுத்த சிறுமியை வெட்டிய வாலிபருக்கு '10 ஆண்டு'
காதலிக்க மறுத்த சிறுமியை வெட்டிய வாலிபருக்கு '10 ஆண்டு'
ADDED : ஏப் 23, 2025 12:28 AM
சென்னை, காதலிக்க மறுத்த சிறுமி வெட்டிய வாலிபருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் நித்யானந்தம், 25. இவர், அதே பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 2020 மார்ச்சில் பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு, வாலிபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர், கத்தியால் சிறுமியின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
படுகாயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து, அண்ணா நகர் மகளிர் போலீசார், போக்சோ சட்டம், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, நித்தியானந்தத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ஏழு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என, தீர்ப்பளித்தார்.
***