/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் நிலையத்தில் மேலும் 100 'சிசிடிவி'
/
சென்ட்ரல் நிலையத்தில் மேலும் 100 'சிசிடிவி'
ADDED : ஏப் 16, 2025 12:15 AM
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேலும் 100 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதலாக பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி பயன்படுத்தவுள்ளோம். சென்னை சென்ட்ரல் ரயில நிலையத்தில் 90 க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறோம். கஞ்சா, குழந்தை கடத்தல், மொபைல்போன், நகை திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க 'சிசிடிவி' கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
அந்த வகையில், மேலும் 100 கேமராக்களை பொருத்த, சில மாதங்களுக்கு முன் நிர்வாகத்திடம் பரிந்துரை செய்யப்பட்டது. நடைமேடைகள், நுழைவு பகுதிகள், பார்சல் சர்வீஸ் வளாகம் மற்றும் அருகில் உள்ள புறநகர் மின்சார ரயில் நிலையத்தின் சில பகுதிகளையும் தேர்வு செய்து பட்டியல் வழங்கப்பட்டது.
அந்த வகையில் 100 கேமராக்கள் பொருத்துவற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய கேமராக்கள் பொருத்தி, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

