/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஜி.எம்., மருத்துவமனையில் 1,000 போலீசாருக்கு பரிசோதனை
/
எம்.ஜி.எம்., மருத்துவமனையில் 1,000 போலீசாருக்கு பரிசோதனை
எம்.ஜி.எம்., மருத்துவமனையில் 1,000 போலீசாருக்கு பரிசோதனை
எம்.ஜி.எம்., மருத்துவமனையில் 1,000 போலீசாருக்கு பரிசோதனை
ADDED : செப் 30, 2025 02:01 AM
சென்னை, சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவ மனையில், 1,000 போலீசாருக்கு இதய ஆரோக்கியத்திற்கான பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அம்மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் ஜோதிர்மயா தாஸ், பாபு ஏழுமலை ஆகியோர் கூறியதாவது:
இந்தியாவில் மிகப்பெரிய சுகாதார சவால்களில் ஒன்றாக இதய பாதிப்பு உள்ளது. தொற்றா நோய்களில் ஏற்படும் உயிரிழப்புகளில், 27 சதவீதம் இதய நோயால் ஏற்படுகிறது.
இந்தியாவில், மாரடைப்பால் உயிரிழக்கும் ஆண்களில், 50 சதவீதம் பேர், 50 வயதை அடைவதற்குள் உயிரிழந்து வருகின்றனர்.
இதற்கு மன அழுத்தம், மோசமான உணவு முறை, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, உடல் பருமன் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன.
எனவே, போலீசாரின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள வட்டங்களில், 1,000 போலீசாருக்கு இதய ஆரோக்கிய பரிசோதனை செய்யப்பட்டது.
உலக இதய தினத்தையொட்டி, சென்னை காவல்துறையுடன் இணைந்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.