ADDED : ஜன 25, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல், பாலாஜி நகரில் குட்கா பொருட்கள் வினியோகம் நடப்பதாக, புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில், ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு, நான்கு பேர் பொட்டலங்கள் மாற்றுவது தெரிய வந்தது.
போலீசார் அவர்களை மடக்கி, சோதனையிட்டதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 106 கிலோ 'ஹான்ஸ், கூலிப், விமல் பாக்கு' உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், செங்குன்றம் கருக்குவேல், 26, அம்பத்துார் கண்ணையா, 51, கொளத்துார் கிருஷ்ணராஜ், 31, மற்றும் துாத்துக்குடி சின்னத்தம்பி, 31, ஆகியோர் என தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, விற்பனை செய்வது தெரிய வந்தது.

