/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
/
குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
ADDED : மார் 10, 2026 05:28 AM

மீஞ்சூர்: குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில், துாங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன், தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சீனிவாசன், 15. திருவெள்ளவாயல் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். முனுசாமி மற்றும் மனைவி முனியம்மாள் ஆகியோர் கூலித்தொழிலாளிகள்.
நேற்று முன்தினம் மாலை, உறவினர் வீட்டிற்கு பெற்றோர் சென்றிருந்தனர். சீனிவாசனும் ஊரணம்பேடு அருகில் உள்ள செங்கழனீர்மேடு கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்றுவிட்டு, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வீடு திரும்பினார்.
கபடி விளையாடிய அசதியில் குடிசை வீட்டில் நன்றாக துாங்கி கொண்டிருந்தார். காலை 6:00 மணிக்கு குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது, சீனிவாசன் மீது கூரை விழுந்ததால், அவர் தீயில் சிக்கி அலறினார்.
அக்கம்பக்கத்தினர் வீட்டின் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், தகவலறிந்து விரைந்து வந்த வடசென்னை அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.
அதற்குள் தீயில் சிக்கிய சீனிவாசன், பலத்த தீக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்டூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மின் கசிவு காரணமாக குடிசை தீப்பற்றி எரிந்ததாக அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.

