ADDED : அக் 24, 2026 10:57 PM

அ நிறம் | அளவு
திருவேற்காடு: திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 40, என்பவரின் மகள் பிரியங்கா, 15, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
காலாண்டு தேர்வில் சகோதரியைவிட குறைந்த மதிப்பெண் பெற்றதால், பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, நேற்று (அக்.,23) வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருவேற்காடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவியின் தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளனவா என விசாரிக்கின்றனர்.
