வியாசர்பாடி ரவுடி ரவிகுமார் கொலை வழக்கில் 11 பேருக்கு விடுதலை
வியாசர்பாடி ரவுடி ரவிகுமார் கொலை வழக்கில் 11 பேருக்கு விடுதலை
ADDED : ஆக 21, 2026 06:21 PM
சென்னை: வியாசர்பாடி ரவுடி ரவிகுமார் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுதலை செய்து, சென்னை மாநகர நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி பொக்கை ரவி என்ற ரவிகுமார், 45, கடந்த 2014 ஜூன் 30ல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு சிகிச்சைக்காக வந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.
ராயப்பேட்டை போலீசார் விசாரணையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ்வர், முன்பகை காரணமாக கூட்டாளிகளுடன் சேர்ந்து, ரவிகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, விக்னேஷ்வர் உட்பட 10 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னை மாநகர நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே.பி. தமிழரசி பிறப்பித்த உத்தரவு:
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 26 சாட்களில், புகார்தாரரும் ரவிக்குமாரின் உறவினருமான தமிழ்செல்வன் உட்பட பலர் பிறழ் சாட்சியாக மாறினர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சாட்சிகள், குற்றச்சாட்டை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை.
மேலும், குற்றத்தை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்
