ADDED : ஆக 21, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
வளசரவாக்கம்: வளசரவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மகாலட்சுமி, 35. வெளியில் சென்று குடியிருப்புக்குள் நுழையும்போது, பின்னால் வந்த நபர், மகாலட்சுமி அணிந்திருந்த 8 சவரன் செயினை பறித்து தப்பினார்.
வளசரவாக்கம் போலீசார் விசாரித்து, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சத்யா, 25, என்பவரை கைது செய்தனர். கடன் பிரச்னையில் சிக்கியிருந்த அவர், வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இதேபோல், நெசப்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெண்களிடம் செயின் பறித்தது தெரிந்தது.
