ADDED : செப் 30, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
ஆவடி: ஆவடி மாநகராட்சி ஊழியர்கள், பருத்திப்பட்டு, புதிய ராணுவ சாலை, திருமுல்லைவாயில், பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில், சாலையில் சுற்றித்திரிந்த 11 மாடுகளை, நேற்று அதிகாலை பிடித்தனர். அவற்றை காஞ்சிபுரத்தில் உள்ள, மாடுகளை பராமரிக்கும் இடமான கோ – சாலையில் அடைத்தனர்.
நடப்பாண்டில் இதுவரை 141 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் 1.90 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
