/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னையில் சிக்கிய போதை கும்பல் வியாபாரிகள் உட்பட 11 பேருக்கு 'காப்பு'
/
வடசென்னையில் சிக்கிய போதை கும்பல் வியாபாரிகள் உட்பட 11 பேருக்கு 'காப்பு'
வடசென்னையில் சிக்கிய போதை கும்பல் வியாபாரிகள் உட்பட 11 பேருக்கு 'காப்பு'
வடசென்னையில் சிக்கிய போதை கும்பல் வியாபாரிகள் உட்பட 11 பேருக்கு 'காப்பு'
ADDED : டிச 09, 2024 03:10 AM
வியாசர்பாடி:வியாசர்பாடி, கூட்செட் அருகே 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் விற்கப்படுவதாக, வடக்கு மண்டல இணை கமிஷனருக்கு, நேற்று தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசாரின் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையைச் சேர்ந்த அத்திகூர் ரகுமான், 25, என்பதும், 'மெத் ஆம்பெட்டமைன்' பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்படி, பழைய வண்ணாரப்பேட்டை, வேலாயுத பாண்டியன் தெருவைச் சேர்ந்த முகமது சுபேர், 25, புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 'மெத் ஆம்பெட்டமைன்' வியாபாரிகளான இம்ரான், 26, இர்பான், 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கல்லுாரி நண்பர்களான அத்திகூர் ரகுமான், முகமது சுபேர் ஆகியோர், மெத் ஆம்பெட்டமைன் வியாபாரிகளிடம் 1 கிராம் 3,000 ரூபாய்க்கும் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்த 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் வியாசர்பாடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கொடுங்கையூர்
சென்னை, மூலக்கடை பகுதியில் கொடுங்கையூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர்களிடம் சோதனையிட்டனர். இதில், 2 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' ஒன்றரை கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், நீலாங்கரை, வைத்தியலிங்கம் சாலையைச் சேர்ந்த ஹனி ஸ்டீபன், 20, மேற்கு சைதாப்பேட்டை, வி.ஜி.பி., சாலையைச் சேர்ந்த தினேஷ், 23, லிங்கமணி, 23, ஆகாஷ், 23, என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை
வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம் சுடுகாட்டில் 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் விற்பதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டு அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர்.
இதில், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ரைஸ், 25, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 24, என்பதும், மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின்படி, மெத் ஆம்பெட்டமைன் வியாபாரியான வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்த ரைஸ் அகமத் கான், 34, என்பவரை கைது செய்து, 2 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, மூவரையும் சிறையில் அடைத்தனர்.