/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் யோகா, மூச்சு பயிற்சி 12 நாள் சிறப்பு முகாம் நிறைவு
/
ஆவடியில் யோகா, மூச்சு பயிற்சி 12 நாள் சிறப்பு முகாம் நிறைவு
ஆவடியில் யோகா, மூச்சு பயிற்சி 12 நாள் சிறப்பு முகாம் நிறைவு
ஆவடியில் யோகா, மூச்சு பயிற்சி 12 நாள் சிறப்பு முகாம் நிறைவு
ADDED : மே 24, 2025 11:47 PM

ஆவடி மொபைல் போன் பழக்கத்திலிருந்து சிறுவர் - சிறுமியரை மீட்டெடுக்கும் நோக்கில், ஆவடி அடுத்த மிட்னமல்லியில், கடந்த 12ம் தேதி சிறப்பு முகாம் துவக்கப்பட்டு, நேற்று காலை நிறைவடைந்தது.
ஏ.எஸ்.சி., விளையாட்டு குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு முகாமில், தினமும் காலை 7:00 மணி முதல் 10 மணி வரை, யோகா, மூச்சுப் பயிற்சி, கபடி, கால்பந்து என, மனவளம் மற்றும் உடல் நலம் சார்ந்த பயிற்சிகளோடு, சத்தான காலை உணவும் வழங்கப்பட்டது.
இதில், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுகளிலிருந்து, 200க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அவர்கள், வயதின் அடிப்படையில் குழுவாகப் பிரிக்கப்பட்டு, பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்றனர்.
நேற்று நிறைவு நாள் விழாவில், பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவருக்கும், பரிசு, சான்றிதழ், சீருடை வழங்கப்பட்டது.
இனி, ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும், இவர்களுக்கு தொடர் பயிற்சிகள் வழங்கப்படும் என, விழா ஏற்பாட்டாளர்கள் கூறினர்.