ADDED : நவ 21, 2024 12:14 AM
சென்னை,சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு நேற்று காலை 7:45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம்; காலை 8:25 மணிக்கு கோல்கட்டா விமானம்; காலை 9:40 மணி பெங்களூரு விமானம்; காலை 10:10 மணி திருவனந்தபுரம் விமானம்; மதியம் 12:35 மணி சிலிகுரி விமானம்; இரவு 10:45 மணி கோல்கட்டா விமானம் ஆகிய ஆறு புறப்பாடு விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.
இதேபோல், சென்னைக்கு வர வேண்டிய காலை 9:00 மணி பெங்களூரு விமானம்; மதியம் 12:00 மணி புவனேஸ்வர் விமானம்; மதியம் 1:40 மணி திருவனந்தபுரம் விமானம்; மதியம் 1:45 மணி கோல்கட்டா விமானம்; மாலை 6:40 மணி சிலிகுரி விமானம்; இரவு 10:05 மணி கோல்கட்டா விமானம் ஆகிய ஆறு வருகை விமானங்கள், நேற்று ரத்து செய்யப்பட்டன.
நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில், நேற்று ஒரே நாளில் 12 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.