/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 12 பேருக்கு நிபந்தனை ஜாமின்
/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 12 பேருக்கு நிபந்தனை ஜாமின்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 12 பேருக்கு நிபந்தனை ஜாமின்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 12 பேருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : நவ 11, 2025 12:36 AM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி அஞ்சலை உட்பட, 12 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட, 27 பேர் கைது செய்யப்பட்டனர். உடல்நிலை பாதிப்பு காரணமாக, நாகேந்திரன் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி, அஸ்வத்தாமன் உட்பட 14 பேர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், நேற்று நடந்தது. மனுதாரர் தரப்பில் முத்தமிழ் செல்வகுமார், காசிராஜன் ஆகியோர் ஆஜராகினர்.
மனு மீதான வாதங்கள் முடிவடைந்த நிலையில், 'ரவுடி அஞ்சலை மற்றும் ரவடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உட்பட, 12 பேருக்கும், மாவட்ட முதன்மை அமர்வில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கப்பட்டது.
அதேநேரம், குற்றவாளிகள் கோகுல், ஹரிதரன் ஆகியோருக்கு ஜாமின் வழங்க, நீதிபதி மறுத்து உத்தரவிட்டார்.

