ADDED : நவ 11, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டியம்பாக்கம்: பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒட்டியம்பாக்கம். இந்த ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை, ஒட்டியம்பாக்கம் மலையை ஒட்டியுள்ள காலி இடத்தில் கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணியளவில், மர்ம நபர்கள் வைத்த தீயினால், குப்பை கொழுந்துவிட்டு எரிந்தது.
தீ குப்பை கிடங்கின் ஓரத்தை சுற்றி எரிந்ததால், உணவு தேடி வந்த 10க்கும் மேற்பட்ட மாடுகள், கிடங்கின் நடுவில் வெளியேற முடியாமல் தவித்ததோடு, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்னைக்கு ஆளாகினர்.
மழையின் காரணமாக குப்பை ஈரப்பதமாக இருந்ததால், இரவு 9:00 மணியளவில் தீ மேற்கொண்டு பரவாமல் தானாக அணைந்ததோடு, மாடுகள் பத்திரமாக வெளியேறியதாக, ஊராட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

