/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
123 கிலோ பிளாஸ்டிக் பைகள் கோயம்பேடு சந்தையில் பறிமுதல்
/
123 கிலோ பிளாஸ்டிக் பைகள் கோயம்பேடு சந்தையில் பறிமுதல்
123 கிலோ பிளாஸ்டிக் பைகள் கோயம்பேடு சந்தையில் பறிமுதல்
123 கிலோ பிளாஸ்டிக் பைகள் கோயம்பேடு சந்தையில் பறிமுதல்
ADDED : ஏப் 27, 2025 01:39 AM
கோயம்பேடு:அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு, கோயம்பேடு சந்தையில் அதிகரித்துள்ளதாக, மாநகராட்சி சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டலம், மாநகராட்சி சுகாதார துறை மற்றும் அங்காடி நிர்வாக குழு இணைந்து, கோயம்பேடு காய்கறி, பழம், மலர் மற்றும் உணவு தானிய சந்தைகளில், நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில், 406 கடைகளில் இருந்து 123 கிலோ பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு, 65,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் சோதனை, கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.