/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடப்பாண்டில் 'வாரண்ட்' பிறப்பிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் 1,258 பேர் கைது

ADDED : ஏப் 27, 2025 02:26 AM
சென்னை:சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ஜாமினில் சென்றவர்கள் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இதையடுத்து, தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனர் உத்தரவின் படி, 4 இணை கமிஷனர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர், கிழக்கு மண்டலத்தில், 414 குற்றவாளிகளும், தெற்கு மண்டலத்தில், 224 குற்றவாளிகளும், வடக்கு மண்டலத்தில், 288 குற்றவாளிகளும், மேற்கு மண்டலத்தில், 292 குற்றவாளிகளும், மத்திய குற்றப்பிரிவில், 40 குற்றவாளிகள் என, நடப்பாண்டில் 1,258 தேடப்படும் குற்றவாளிகளை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன.