/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
/
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : மார் 19, 2025 12:09 AM

சென்னை,சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு செல்லும் விரைவு ரயிலில், கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்துள்ளது. ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும், ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில், 5வது நடைமேடையில் நின்ற மங்களூர் மெயில் ரயிலின் பொது பெட்டியில் சோதனை செய்தபோது, 13.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு 2.70 லட்சம் ரூபாய்.
விசாரணையில், மேற்கு வங்கம் மாநிலம், பிர்போம் மாவட்டத்தைச் சேர்ந்த இஷா ஹாக், 26, என்பதும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கஞ்சா பொட்டலங்களை வாங்கி ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும் தெரியவந்தது. இங்கிருந்து மங்களூர் செல்ல இருந்த வரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.