/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
13 புது பேட்டரி வாகனம் ஏர்போர்ட்டில் இயக்கம்
/
13 புது பேட்டரி வாகனம் ஏர்போர்ட்டில் இயக்கம்
ADDED : நவ 09, 2024 12:45 AM

சென்னை, சென்னை விமான நிலையத்தில், பயணியர் வசதிக்காக, 13 புதிய கூடுதல் பேட்டரி வாகனங்கள் சேவை துவக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர், தனியார் வாடகை கார்களில் செல்ல வசதியாக, உள்நாட்டு டெர்மினல் -1 வருகை பகுதியில், 'பிக் அப் பாயிண்ட்' செயல்பட்டு வந்தது.
இவற்றை, முன்னறிவிப்பின்றி கடந்த ஜூலையில், 1 கி.மீ., தொலைவில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது.
இதனால், உள்நாட்டு வருகை முனையத்தில் வரும் பயணியர், உடைமைகளை சுமந்தபடி, நீண்ட துாரம் நடக்கும் சூழல் உள்ளது.
இதற்காக, விமான நிலைய ஆணையம் சார்பில், சொற்ப அளவிலான பேட்டரி வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால், கூடுதல் பேட்டரி வாகனங்களை இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பயணியர் புதிய பிக் அப் பாயிண்ட் பகுதிக்கு செல்ல வசதியாக, விமான நிலையம் சார்பில் கூடுதலாக, 13 புதிய பேட்டரி வாகனங்கள் நேற்று முதல் இயங்க துவங்கி உள்ளது. மொத்தம், 22 பேட்டரி வாகனங்கள், முனையங்களில் இயக்கப்படுவதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.