தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 13 மாடி குடியிருப்பு திட்டம் ‘டேக் டெவலப்பர்ஸ்’ அறிவிப்பு

13 மாடி குடியிருப்பு திட்டம் ‘டேக் டெவலப்பர்ஸ்’ அறிவிப்பு

13 மாடி குடியிருப்பு திட்டம் ‘டேக் டெவலப்பர்ஸ்’ அறிவிப்பு


ADDED : செப் 13, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, செப். 14–

போரூர் – பூந்தமல்லி சாலையில், ‘பால்மன்டைசா’ என்ற பெயரில் புதிய 13 மாடி குடியிருப்பு திட்டம், ‘டேக் டெவலப்பர்ஸ்’ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, ‘டேக் டெவலப்பர்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

‘டேக் டெவலப்பர்ஸ்’ நிறுவனம், போரூர் – பூந்தமல்லி சாலையில் குமணன்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் அருகில், ‘பால்மன்டைசா’ என்ற பெயரில், புது அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

இங்கு, 13 தளங்களில் மொத்தம், 194 சொகுசு வீடுகள் கட்டப்படுகின்றன. ‘பிரைவேட் டெரஸ்’ எனப்படும் தனி மேல்மாடி போன்ற பிரத்யேக வசதி இங்கு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, 10,000 சதுரடியில் மூன்று தளங்களை கொண்ட கிளப் ஹவுஸ், 40க்கும் மேற்பட்ட சிறப்பு வசதிகள் அமைய உள்ளன.

போடியம் நீச்சல் குளம், நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம், மினி தியேட்டர், யோக அறை, அலுவலக வேலை செய்வதற்கான இடவசதி, உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள், இதன் சிறப்பு அம்சங்களாகும்.

மெட்ரோ ரயில் நிலையம், அடுக்குமாடி வணிக வளாகங்களில் அடித்தள பகுதி பாதுகாப்புக்காக ‘டயாபிரம் வால்’ கட்டப்படுகிறது. முதல் முறையாக இந்த திட்டத்தில் குடியிருப்பு கட்டடத்துக்கு டயாபிரம் வால் கட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை, 1.19 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இத்திட்ட அறிமுக விழாவில், ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குமார் வேம்பு, ஆதித்ய பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் கட்டுமான நிதி பிரிவின் சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர் ஆர்.ஹரி விக்னேஷ், ஆதித்ய பிர்லா பைனான்ஸ் நிறுவனத்தின் பிரைம் ஹோம் லோன்ஸ் பிரிவு மண்டல விற்பனை மேலாளர் மஞ்சுநாத் செல்வமணி, நில உரிமையாளர் குமரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் சதீஷ்குமார் சந்தானம் கூறுகையில், ‘‘பால்மன்டைசா திட்டம் எங்களது பிரீமியம் குடியிருப்பு கட்டும் பணியில் பெயர் சொல்லும் திட்டமாக அமையும்.’’ என்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

 

 

 

 

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us