/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு
/
ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு
ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு
ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு
ADDED : பிப் 06, 2024 11:59 PM
சென்னை மத்திய பட்ஜெட்டில், இந்திய ரயில்வே துறைக்கு 2024 -25ம் ஆண்டிற்காக மொத்தம் 2.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், ரயில் பெட்டிகள் தயாரிப்பில் முக்கியமானதாக இருக்கும் சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலைக்கு, 13,872 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
காலத்துக்கு ஏற்ப நவீன ரயில் பெட்டிகள், சுற்றுலா, ராணுவத்துக்கான ரயில், மெட்ரோ ரயில் பெட்டி உள்ளிட்ட 75 வகைகளில், நுாற்றுக்கணக்கான வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள், ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படுகின்றன.
சமீப காலமாக, இங்கு தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் விரைவு ரயில்கள், பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
பட்ஜெட்டில் ஒதுக்கிய 13,650 கோடி ரூபாய் வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்கள், வழக்கமான எல்.எச்.பி., பெட்டிகள், மின்சார ரயில் பெட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படும். எஞ்சிய நிதி ஐ.சி.எப்., வளாகம், குடியிருப்பு வளாகம் போன்றவை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.
கடந்த ஆண்டில் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் பல்வேறு புதிய கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டதால், 15,428 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

