/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிரியை வீட்டில் 14 சவரன் திருட்டு
/
ஆசிரியை வீட்டில் 14 சவரன் திருட்டு
ADDED : நவ 08, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்,
சேலையூர், அகரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் எஸ்தர், 39; தனியார் பள்ளி ஆசிரியை.
நேற்று முன்தினம்மகன், மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, எஸ்தரும் பள்ளிக்கு சென்று விட்டார்.
வீட்டின் 'கிரில் கேட்'டை பூட்டாமல், கதவை மட்டும் பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். மாலை பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த எஸ்தர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, 14 சவரன்நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.