/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' வாஸ்போ ' செஸ் போட்டி துவக்கம் மாணவியர் 145 பேர் உற்சாகம்
/
' வாஸ்போ ' செஸ் போட்டி துவக்கம் மாணவியர் 145 பேர் உற்சாகம்
' வாஸ்போ ' செஸ் போட்டி துவக்கம் மாணவியர் 145 பேர் உற்சாகம்
' வாஸ்போ ' செஸ் போட்டி துவக்கம் மாணவியர் 145 பேர் உற்சாகம்
ADDED : பிப் 19, 2025 12:12 AM

சென்னை, எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'வாஸ்போ'என்ற தலைப்பில், மாநில செஸ் போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரியில் நேற்று துவங்கியது.
இதில், பள்ளி அளவில், 15, 18 வயது பிரிவுகளும், கல்லுாரி பிரிவினருக்கு தனியாகவும் போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில், முதல் பரிசாக, 20,000 ரூபாயும், இரண்டாம் பரிசு, 15,000, மூன்றாம் பரிசு, 10,000 வழங்கப்படுகின்றன. முதல் பத்து நிலை வீராங்கனையருக்கும், ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
முதல் நாளான நேற்று காலை, கல்லுாரி மாணவியருக்கான போட்டிகள் மட்டும் துவங்கின. போட்டியில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 145 மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில், ஆறு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடக்கின்றன. போட்டியை, கல்லுாரியின் முதல்வர் அர்ச்சனா பிரசாத் மற்றும் உடற்கல்வியியல் இயக்குநர் அமுதா ஆகியோர் துவங்கி வைத்தனர். இன்று பள்ளிகளுக்கு இடையிலான போட்டியும் நடக்க உள்ளது.