ADDED : ஆக 06, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கநல்லுார்,நங்கநல்லுாரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் 1,450 பேர் மனுக்கள் அளித்தனர்.
ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார் 162வது வார்டு, பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்ட சாலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
மண்டல குழு தலைவர் சந்திரன் முகாமை துவக்கி வைத்தார். மாலை 3:00 மணி வரை, 1,450 மனுக்கள் பெறப்பட்டன.
பட்டா, சொத்து வரி பெயர் மாற்றம், மருத்துவ காப்பீட்டு அட்டை, புதியமின் இணைப்பு போன்றவை கேட்டு மனு கொடுத்த, 46 பேருக்கு தீர்வு கிடைத்தது.
அதற்கான சான்றிதழ், ஆணை உத்தரவை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன் வழங்கினார். மற்ற கோரிக்கைகள், 45 நாட்களின் தீர்வு காணப்படும் என, தெரிவிக்கப்பட்டது.