/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷனில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள்
/
ரேஷனில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள்
ADDED : நவ 15, 2024 12:59 AM
சென்னை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், 'அமுதம்' பெயரில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.
இது, தீபாவளியை முன்னிட்டு, 499 ரூபாய்க்கு, மஞ்சள் துாள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு உட்பட, 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை, சென்னை கோபாலபுரம், அண்ணா நகர், பெரியார் நகரில் உள்ள அமுதம் அங்காடிகளிலும், 10 ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்தது.
இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, தற்போது, தென்சென்னையில் உள்ள 144 அமுதம் ரேஷன் கடைகளில், 499 ரூபாய்க்கு, 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை துவங்கியுள்ளது. தொடர்ந்து, வடசென்னையின் 354 கடைகளிலும் விற்கப்பட உள்ளது.
தீபாவளிக்காக, பெரிய கட்டைபையில் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. அதன் விலை மட்டும், 30 ரூபாய். தற்போது, துணி பையில் மளிகை தொகுப்புகள் விற்கப்படுகிறது.