/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1.5 கி.மீ., ஓடையான புழல் உபரி கால்வாய் மணலியை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம்
/
1.5 கி.மீ., ஓடையான புழல் உபரி கால்வாய் மணலியை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம்
1.5 கி.மீ., ஓடையான புழல் உபரி கால்வாய் மணலியை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம்
1.5 கி.மீ., ஓடையான புழல் உபரி கால்வாய் மணலியை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அபாயம்
ADDED : அக் 08, 2024 12:17 AM

மணலி, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி நிரம்பும் பட்சத்தில், இரு மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படும்.
திறக்கப்படும் உபரி நீரானது, வடகரை, புழல், வடபெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயல், எஸ்.ஆர்.எப்., சந்திப்பு, பர்மா நகர் உயர்மட்டம் பாலம். சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக, எண்ணுார் கொசஸ்தலை மற்றும் பகிங்ஹாம் கால்வாயுடன் இணைந்து, முகத்துவாரத்தில் கடலில்கலக்கும் வகையில் அமைப்பு உள்ளது.
இந்நிலையில், அதிகபட்சமாக 2015ம் ஆண்டு, புழல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்த, 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான உபரி நீரால், திருவள்ளூர் தெற்கு, வடசென்னை முழுதும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், புழல் நீர்த்தேக்கத்தில் இருந்து, பர்மா நகர் உயர் மட்ட பாலம் வரை, 13.5 கி.மீ., உபரி கால்வாயில், 10 கி.மீ., துார கால்வாய், 130 - 200 அடி அகலத்தில் உள்ளது.
மணலி, ஆமுல்லைவாயல் சந்திப்பிற்கு பின், குறுகி போயிருக்கும் உபரி கால்வாயில், அளவிற்கு அதிகமான உபரிநீர் செல்ல முடியாததால், பக்கவாட்டில் வெள்ளநீர் பரவி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, மணலி விரைவு சாலை, எஸ்.ஆர்.எப்., சந்திப்பு முதல், பர்மா நகர் உயர்மட்ட பாலம் வரையிலான, 1.5., கி.மீ., துாரம், உபரி கால்வாய், 30 - 60 அடிக்கு குறுகி போயுள்ளது.
மேலும், கருவேல முட்செடிகள் அடர்ந்து, நீரோட்டம் பாதிக்கும் வகையில் புதர்மண்டி போயுள்ளது. இதன் காரணமாக, வெள்ளகாலத்தில் அதிகளவில் உபரி நீர் திறக்கப்பட்டால், மணலி முழுவதும் வெள்ளபாதிப்பு ஏற்படலாம் என, அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது:
புழல் நீர்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில், இரு மதகுகள் முழுவதுமாக திறந்தாலும் கூட, வினாடிக்கு, 7,500 கன அடி உபரி நீர் மட்டுமே வெளியேறும்.
ஆமுல்லை வாயல் உயர்மட்ட பாலம் வரை, 12,500 கன அடி உபரி நீர் செல்லும் அளவிற்கு உள்ளது. அதன் பின் 5,000 கன அடி உபரிநீர் மட்டுமே செல்ல முடியும்.
ஆனால், அங்கு எந்தவித ஆக்கிரமிப்புகளும் கிடையாது. செடிகளால் நீரோட்டம் பாதிக்காது. இருப்பினும், அகற்றும் பணி நடக்கிறது.
வெள்ளப் பாதிப்பிற்கு ஏரி நீர் மட்டுமே காரணம் கிடையாது. 13.5 கி.மீ., துார உபரி கால்வாயின் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள ஊர்களின் மழைநீரும் அதில் வந்து சேரும்.
மேலும் கடல் மட்டத்தை விட, வடிகால்கள் ஒன்றரை அடி தாழ்வாக உள்ளது. இதனால், கடல் உள்வாங்கும் வெள்ளத்தின் அளவு குறைவாகும்.
அப்போது, கொள்ளளவு அதிகரிக்கும். அதுபோன்ற நேரங்களில் தான், எதிர்பாராத வெள்ளபாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.