/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
15 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் நீக்க வாய்ப்பு
/
15 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் நீக்க வாய்ப்பு
15 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் நீக்க வாய்ப்பு
15 லட்சம் வாக்காளர்கள் சென்னையில் நீக்க வாய்ப்பு
ADDED : டிச 05, 2025 06:54 AM

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நவ., 4ம் தேதி துவங்கியது. தொகுதி வாரியாக பொறுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் என, 3,718 ஓட்டுச்சாவடி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கணக்கீட்டு படிவம் பெறுவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி கூட்டம், மூன்றாவது முறையாக, ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அதிகாரிகள் பேசிய தாவது:
சென்னை மாவட்டத்தில், 40.04 லட்சம் வாக்காளர்களில், 39.59 லட்சம் பேருக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் 22.79 லட்சம் பேரிடமிருந்து விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு கணினியில் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2.23 லட்சம் பேருக்கு இரட்டை ஓட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 1.49 லட்சம் இறந்தவர்கள் இப்பட்டியலில் இடம் பெற் றுள்ளனர். 8.39 லட்சம் பேர் நிரந்தரமாக மற்றொரு தொகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 36,979 பேர் பதில் அளிக்க முடியாத சூழலில் உள்ளனர்.
அதன்படி பார்த்தால் 25.99 சதவீதம் பேர் படிவத்தை திரும்ப அளிக்க முடியாத சூழலில் உள்ளனர். எனவே, 10.40 லட்சத்தி ல் இருந்து 15 லட்சம் வரை பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

