/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையின் 15 வயது சிறுமி சிலம்ப போட்டியில் சாதனை
/
சென்னையின் 15 வயது சிறுமி சிலம்ப போட்டியில் சாதனை
ADDED : நவ 09, 2025 04:22 AM

சென்னை:தேசிய, தென் மாநிலம் மற்றும் மாநில சிலம்ப போட்டிகளில், இதுவரை 8 தங்கம் உட்பட 27 பதக்கங்கள் மற்றும் 7 உலக சாதனைகளை குவித்து, சென்னையைச் சேர்ந்த ஹரித்தாஸ்ரீ அசத்தி வருகிறார்.
கொளத்துாரைச் சேர்ந்தவர்கள் காலிதாஸ் மற்றும் தாரகேஷ்வரி தம்பதியர். இவர்களின் மகள் ஹரித்தாஸ்ரீ, 15. சூரப்பேட்டு வேலம்மாள் வித்யாஸ்ரம் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயது முதலே, சிலம்பம் மீது கொண்ட ஈர்ப்பால், தன் 8வது வயதில், சீரும் சிலம்பம் டிரெடிஷனல் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பில், சிலம்ப பயிற்சி பெற துவங்கினார்.
ஆரம்ப காலத்தில், பதக்கம் ஏதும் கைப்பற்றாமல், போட்டி பட்டியலில் சற்று பின்தங்கியிருந்தார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில், பல பதக்கங்களை கைப்பற்றி, தமிழகத்தின் முன்னணி வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
இவர், இதுவரை தேசிய அளவிலான போட்டிகள் உட்பட, பல்வேறு போட்டிகளில், 8 தங்கம் உட்பட, மொத்தம் 27 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மேலும், 600 மணி நேரம், 25 நாட்கள் தொடர்ந்து இடைவிடாமல் சிலம்பம் சுற்றி, உலக சாதனை படைத்துள்ளார். இதுபோல், மொத்தம் 7 உலக சாதனைகளை தனிநபராக படைத்து அசத்தியுள்ளார்.

