/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
/
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : மே 29, 2025 11:56 PM
சென்னை, எழும்பூரில் இருந்து ரயிலில், வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர், எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில், நேற்று முன்தினம் இரவில் சோதனை நடத்தினர்.
அப்போது, ரயில் நிலைய வளாகத்தில், 48 மூட்டைகள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தன. அங்கு யாரும் இல்லை.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மூட்டைகளை பிரித்து பார்த்த போது, ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
பின், 1,500 கிலோ கொண்ட, 48 மூட்டை அரிசியை, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மொபைல்போன் திருட்டு
எழும்பூரில் இருந்து விருதுநகர் செல்ல, விஜயராஜ் 56, என்பவர் பொதிகை ரயிலில் பயணம் செய்தார். சில நிமிடங்களில், அவரது மொபைல் போனை காணவில்லை.
இதையடுத்து, அவர் அளித்த புகாரில், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தனர்.
சந்தேகத்தின் பேரில், யானைகவுனி பகுதியை சேர்ந்த பாபு, 41, என்பவரை பிடித்து விசாரித்ததில், போன் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.