/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
16 குழந்தை தொழிலாளர்கள் கோயம்பேடு சந்தையில் மீட்பு
/
16 குழந்தை தொழிலாளர்கள் கோயம்பேடு சந்தையில் மீட்பு
16 குழந்தை தொழிலாளர்கள் கோயம்பேடு சந்தையில் மீட்பு
16 குழந்தை தொழிலாளர்கள் கோயம்பேடு சந்தையில் மீட்பு
ADDED : நவ 21, 2025 04:34 AM
கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த, குழந்தை தொழிலாளர்கள் 16 பேரை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமலாக்க துறை மீட்டது.
கோயம்பேடு சந்தையில் சிறுவர்கள் பணி செய்து வருவதாக, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமலாக்க துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமலாக்கத் துறையின் உதவி கமிஷனர் பழனி தலைமையில், 25 அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இதில், 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட, 12 சிறுவர்கள் மற்றும் 14 வயதிற்கு கீழ் உள்ள 4 சிறுவர்கள் என, மொத்தம் 16 குழந்தை தொழிலாளர்கள், பணியில் ஈடுபட்டிருப்பதை அறிந்தனர்.
அவர்கள் அனைவரையும் மீட்ட அதிகாரிகள், ராயபுரத்தில் உள்ள அரசு தங்கும் விடுதியில் தங்க வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.