/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
/
தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
ADDED : நவ 21, 2025 04:34 AM
வளசரவாக்கம்: பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி உயிரிழந்தது.
வளசரவாக்கம், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் பிரதீப்குமார், 35. இவரது மனைவி ராஜேஸ்வரி, 30. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வரி நான்காவது முறை கர்ப்பமானார்.
பிரசவத்திற்காக கடந்த 15ம் தேதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 18ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரி, நேற்று காலை குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். அப்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ராஜேஸ்வரி அலறல் சத்தம் கேட்டு மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்தது தெரியவந்தது. வளசரவாக்கம் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

