ADDED : டிச 27, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை குன்றத்துார்- - போரூர் சாலை, மாங்காடு - மவுலிவாக்கம் சாலை சந்திக்கும் பாய்கடை சந்திப்பில், சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், சாலை விரிவாக்கம் மற்றும் குடிநீர் குழாய் பணிக்காக, வருவாய் துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
இதையடுத்து, மவுலிவாக்கம் போலீசார் பாதுகாப்புடன் நேற்று சென்ற வருவாய் துறையினர், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 16 கடைகளை, பொக்லைன் இயந்திரத்தால் இடித்து அகற்றினர். அப்போது, கட்டட உரிமையாளர்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

