sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சென்ட்ரல் - கும்மிடி தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து

/

 சென்ட்ரல் - கும்மிடி தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து

 சென்ட்ரல் - கும்மிடி தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து

 சென்ட்ரல் - கும்மிடி தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து


ADDED : டிச 27, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், நாளை எட்டு மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மீஞ்சூர் - அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00 மணி, கடற்கரை - கும்மிடிப்பூண்டி காலை 9:40 மணி, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55 மணி, காலை 11:25 மணி, கும்மிடிப்பூண்டி - கடற்கரை காலை 10:55 மணிக்கும் இயக்கப்படும் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுகிறது.

ஒரு பகுதி ரத்து

சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 10:00 மணி ரயில் பொன்னேரி வரை இயக்கப்படும்.

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 10:30, 11:15 மணி ரயில்கள், எண்ணுார் வரை இயக்கப்படும்.

சிறப்பு ரயில்கள்

எண்ணுார் - சென்ட்ரலுக்கு காலை 10:36, பகல் 12:08 மணிக்கு, நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருவனந்தபுரம் ரயில்

சென்னை - கேரளா மாநிலம் திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், மொரப்பூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடு த்து, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் மொரப்பூரில் நின்று செல்ல வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, வரும் ஜன., 1 முதல் இந்த ரயில் இருமார்க்கத்திலும், தலா ஒரு நிமி டம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us