/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஷ்ணு சஹஸ்ரநாமம் இலவசமாக கற்கலாம்
/
விஷ்ணு சஹஸ்ரநாமம் இலவசமாக கற்கலாம்
ADDED : டிச 27, 2025 05:13 AM
சென்னை: 'விஸ்வாஸ்' அறக்கட்டளை சார்பில், உலக மக்களின் நன்மைக்காக, இம்மாதம் 21ம் தேதி முதல் இன்று வரை, ஏழு நாட்களாக, விஷ்ணு சஹஸ்ரநாமம், இடைவிடாமல் பாராயணம் செய்யப்படுகிறது.
'விஸ்வாஸ்' அறக்கட்டளையின் முதன்மை குருவான, ராகவேந்திரா ஷர்மா கூறியதாவது:
மன அழுத்தம், குழப்பம், கோபம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மன தெளிவை உண்டாக்க, 'விஸ்வாஸ் சப்தாஹம்' எனும், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண இலவச பயிற்சி, தி.நகரில் உள்ள கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.
மார்கழியில் அனைத்து சபாக்களும், பெரிய கலைஞர்களால் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், வளர்ந்து வரும் கலைஞர்களை ஆதரிக்கும் விதமாக, காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இசை கச்சேரி நடக்கிறது. இதில் பங்கேற்பது, விஷ்ணு பகவானுக்கு சேவை செய்வதை போன்றதாகும்.
இந்நிகழ்ச்சியில், 50 பள்ளிகளில் இருந்து 140 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
விஷ்ணு சஹஸ்ரநாமம் பயிற்சியை இலவசமாக பெற விரும்புவோர், விஸ்வாஸ் அறக்கட்டளையை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.

