/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 ஆண்டுகளில் மெரினா கடலில் சிக்கிய 189 பேர் பத்திரமாக மீட்பு
/
3 ஆண்டுகளில் மெரினா கடலில் சிக்கிய 189 பேர் பத்திரமாக மீட்பு
3 ஆண்டுகளில் மெரினா கடலில் சிக்கிய 189 பேர் பத்திரமாக மீட்பு
3 ஆண்டுகளில் மெரினா கடலில் சிக்கிய 189 பேர் பத்திரமாக மீட்பு
ADDED : அக் 17, 2025 11:16 PM
சென்னை: மூன்று ஆண்டுகளில், கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டு உயிருக்கு போராடிய 189 பேரை, மெரினா கடற்கரை உயிர் பாதுகாப்பு பிரிவு போலீசார் காப்பாற்றி உள்ளனர்.
சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் தினம் வருகின்றனர்.
குழந்தைகள், முதியோர் என, அனைத்து வயதினரின் குதுாகலத்திற்கு குறைவில்லாத மெரினா கடற்கரையில், கடல் அலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சிலர், கடலில் விழுந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
அவ்வாறு அலைகளில் சிக்குவோரையும், தற்கொலை முயற்சியில் ஈடுபட முயல்வோரையும் காப்பாற்ற, தமிழக காவல் துறையில், மெரினா கடற்கரை உயிர் பாதுகாப்பு பிரிவு செயல்படுகிறது.
இதில், மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற சென்னை மாநகர காவல் துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஒப்பந்த அடிப்படையில் மீனவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய 189 பேரை, தகுந்த நேரத்தில் காப்பாற்றி உள்ளனர்.
இந்த ஆண்டில், அக்., 16 வரை, ஆண்கள் 31; பெண்கள் 12; சிறுவர்கள் 11; சிறுமியர் 5 பேர் என, 59பேரை காப்பாற்றி இருப்பதாக, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் அதிகாரிகள் தெரிவித் தனர்.